தூத்துக்குடி சட்டத்திற்கு முரணான செயல்களை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களின் அதிகரித்துள்ளது என தேசிய குற்றவியல் ஆய்வு அறிக்கை 2021 தெரிவித்துள்ளது கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போய் உள்ளன தூத்துக்குடியில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழமை அமைப்பு குழந்தைகள் நலஆர்வலர் தேவனேயன் தகவல்.
தூத்துக்குடியில் தோழமை அமைப்பு, யுனிசெப் நிறுவனம் ,மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பில் பத்திரிகையாளர்களின் பங்கு என்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் தோழமை அமைப்பை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் பத்திரிகையாளர் மணி மாவட்ட சமூக நல அலுவலர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
பின்னர் குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் கூறுகையில் தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர் இவர்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் மேலும் தமிழகத்தில் உள்ள காணாமல் போன குழந்தைகள் வட மாநிலங்களில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுவதுடன் வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் காணாமல் போன குழந்தைகள் தமிழகத்தில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தி இந்தச் செயலில் தேசிய அளவில்ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் சட்டத்திற்கு முரணான செயல்களை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தேசிய அளவில் அதிகரித்துள்ளது என தேசிய குற்றவியல் ஆய்வு அறிக்கை 2021 தெரிவித்துள்ளது இது சிறார்கள் செய்யும் குற்றவியல் சம்பவங்கள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்துள்ளது குழந்தைகளை போதைக்கு அடிமையாக்கி குற்ற சம்பவங்களின் ஈடுபடுத்தும் வகையில்நெட்வொர்க் மூலம் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது இதை தடுக்க வேண்டிய கடமை அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்பட்டு தடுக்க வேண்டும்
மேலும் தமிழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குழந்தை நேய தமிழகமாக குழந்தைகளுக்கு எதிரான எதிரான குற்றங்கள் வன்முறைகள் இல்லாத மாவட்டமாக தமிழகமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்
பேட்டி தேவநேயன் குழந்தைகள் நல ஆர்வலர்