கமுதி அருகே கிளாமரம் கிராமத்தில் மகா கணபதி ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம் கிராமத்தில் அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது

முன்னதாக யாகசாலை பூஜை கணபதி ஹோமம் தனபூஜை கோமாதா பூஜை பூராணாகுதி தீபாதாரணை  நடைபெற்று.

மங்கள இசை வாத்தியங்கள்  சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு ஆலய வலம் சென்று மகா கணபதி ஆலய விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மகா கணபதிக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர்,பன்னீர், விபூதி, பஞ்சம் பிரதம உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார தீபா தாரணை நடைபெற்றது.


நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் கிளாமரம், ராமசாமிபட்டி,கீழ ராமநதி,மேல ராமநதி கமுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பல கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.