சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றவர் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் ?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம் சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகு முருகேசன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக புகார் மனு விசாரணைக்காக சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் 08-06-2023 வியாழக்கிழமை சூரங்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
விசாரணைக்காக அழகு முருகன் உடன் அழகு முருகனின் சகோதரர் ராஜகனி என்பவரும் விசாரணைக்கு, விசாரணையின் போது காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் ராஜகனி என்பவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் , இதனால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் ராஜகணியை தள்ளி விடடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது , இதில் ராஜகனி காயம் அடைந்து தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்ற வருகிறது.