ஓட்டப்பிடாரம் அருகே நடு சாலையில் மின்கம்பம் - தொடரும் விபத்துக்கள் - புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் - ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம்?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையம் உள்ளது.மணியாச்சியிலிருந்து -வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையம் வருவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது இந்த சாலை அமைக்கும் போது நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் அப்படியே சாலை அமைத்துள்ளனர். இதற்கு அப்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனால் அதே மீறியும் சாலை அமைக்கப்பட்டது. மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டதால் அந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாலை நடுவே இருக்கும் மின்கம்பத்தை அருகில் இருக்கும் சாலையின் ஓரப்பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை முன் அளித்தும் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.