விளாத்திகுளம் அருகே கோவில் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, மற்றும் பணம் திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள (அருங்குளம்) சுப்பிரமணியபுரம் கிராமத்தில் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலில் பூசாரி கந்தசாமி வழக்கம் போல் நேற்று இரவு திருக் கோவிலை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் . இன்று காலை கோவிலை திறந்து பூஜை செய்ததற்காக வந்த பொழுது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .மேலும் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கிரீடம், நகையும் மற்றும் உண்டியலை உடைத்து பணமும் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 2 லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள் காவல் துறையினர்க்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் எப்போதும் வென்றான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து மரம் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இத்திருக்கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது எனவும் குறிப்பிடத்தக்கது.