ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீ குபேர கண்ணன் மகா கும்பாபிஷேகம் விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே இதம்பாடல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும்ஸ்ரீ சத்தியபாமா ருக்மணி சமேத குபேரக்கண்ணன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை மூன்றாம் கால பூஜை மகா பூர்ணா குதி தீபாதாரணை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு ஆலயம் வலம் சென்று ஆலய விமானகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர் மூலவர் பாமா ருக்மணி சமேத குபேர கண்ணன் சுவாமிகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிருதம் 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் நிலைத்து பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது