தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் முனியசாமி கோவில் திருவிழாவை ஒரு பிரிவினர் நடத்த விடாமல் தடுப்பதாக கூறி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது கோட்டநத்தம் கிராமம் இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இங்குள்ள பழமையான முனியசாமி கோவில் கொடை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் மாதம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் இந்த திருவிழாவை வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

இநிலையில் கடந்த 9ஆம் தேதி முனியசாமி திருக்கோயில் கொடை விழாவுக்காக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த  தனி நபர்கள் சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், சங்கர் ,தங்கம் ,மாரியப்பன் இந்த கோயில் கொடை விழாவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர் இதன் காரணமாக அந்த கிராமத்தில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் மற்றொரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை காவல்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு ஒரு பிரிவினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

எனவே ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் முனியசாமி கோவில் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேட்டி சுடலை மணி வழக்கறிஞர்