ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ புனவாசல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ ஏகநாதர் ஆலய புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் ஒரு காளையை அடக்க தலா ஒன்பது பேர் வீதம் 14 காளைகள் 126 மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி திருச்சி புதுக்கோட்டை விருதுநகர் மதுரை திண்டுக்கல் தேனி பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.தல 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு காளைகள் களத்தில் விடப்பட்டன.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் ரொக்க பணம் நினைவு பரிசு சில்வர் அண்டா கட்டில் சேர் பரிசுகளாக வழங்கப்பட்டது இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடி கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.புனவாசல் கிராம பொதுமக்கள் நிர்வாகிகள் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.