ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்பு நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கரியமல்லம்மாள் கோவில் ஆடிப் பொங்கல் முளைப்பாரி பத்து நாள் உற்சவ விழா காப்புக் கட்டு கொடியேற்ற விழா யாகசாலை கணபதி ஹோமம் கோமாதா பூஜை பூர்ணா குதி தீபாதாரணையுடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து அம்மன் கரியமல்லம்மாள் கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தன, இளநீர் ,பன்னீர் ,விபூதி, பஞ்சாமிருதம் 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.முன்னதாக மங்கல இசை வாத்தியங்களுடன் அம்மன் திரு உருவம் பொறித்த கொடியை கிராமம் ஆலயம் வலம் சென்று கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா 10ம் தேதி திருவிளக்கு பூஜையும் 11ம் தேதி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்தல் இரவு கரகம் எடுத்தல் 12 ம் தேதி காலை பக்தர்கள் செத்தாண்டி வேடம் பால்குடம் அக்னி சட்டி அழகு வேல் குத்தல் மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு முளைப்பாரி எடுத்து கங்கை நீரில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது,
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
ஆன்மிகம்
ஸ்ரீ கரியமல்லம்மாள் ஆடி பொங்கல் முளைப்பாரி உற்சவ விழா கொடியேற்றம் துவங்கம்!
Admin
1 நிமிட வாசிப்பு