ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.ஆலங்குளம் கிராமத்தில் அமைந்து அருளாட்சி செய்துஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஸ்ரீ ஆஞ்சநேயர்ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.முன்னதாக பூஜை கணபதி  ஹோமம் விக்னேஸ்வர பூஜை இரண்டாம் கால பூஜை கோமாத பூஜை பூரணாகுதி தீபாதாரணை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பெருநாழி பாலகுரு மணி ஐயர் சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு ஆலயம் வலம் சென்று விமான கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாமா ருக்குமணி சமேத கிருஷ்ணர் சக்கரத்தாழ்வார் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு கும்ப நீர் ,பால் ,தயிர் ,சந்தன ,இளநீர், பன்னீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மூலிகை திரவிய அபிஷேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும்  எஸ் ஆலங்குளம் கிராம பொதுமக்கள் கும்பாபிஷேக விழா நிர்வாகம் சார்பாக  பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.