ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளி அம்மன் வருடாந்திர ஆவணி மாத முளைப்பாரி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு கூட்டு வழிபாடு பூஜையில் பெண்கள் ஈடுபட்டனர்,கடந்த மூன்றாம் தேதி காப்பு கட்டு கொடி ஏற்றத்துடன் துவங்கிய 11 நாள் திருவிழா 9ம் நாளில் பெண்கள் திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இன்று இரவு வான வேடிக்கை மேளதாளங்களுடன் கரகம் எடுத்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை காலை அழகு வள்ளி அம்மனுக்கு பக்தர்கள் செத்தாண்டி வேடம் அக்கினி சட்டி கரும்பாலை பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேத்தி கடன்களையும் மாலையில் சாக்கு வேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுதல் பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக சென்று அம்மன் ஆலயம் வலம் சென்று கங்கை நீரில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு
அழகு வள்ளி அம்மன் முளைப்பாரி பொங்கல் உற்சவம் திருவிளக்கு கூட்டு வழிபாடு பூஜை !
Admin
1 நிமிட வாசிப்பு