சக்தி மாரியம்மன் 23 ஆம் ஆண்டு பொங்கல் உற்சவ விழா ஆண்கள் உடல் முழுவதும் சகதி பூசி நள்ளிரவில் செத்தாண்டி வேடம் அணிந்து அம்மனுக்கு வினோத வழிபாடு! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் 23ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் பத்து நாள் உற்சவ விழா  கடந்த வாரம் காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது,முக்கிய நிகழ்ச்சியான இன்று நூற்றுக்கு மேற்பட்ட ஆண் பக்தர்கள்   நள்ளிரவில்  தங்களது உடல் முழுவதும்  சகதியை பூசி மேளதாளங்களுடன் நடனமாடி ஊர்வலமாக நகர்வலம் ஆலயம்  வலம்  சென்று சக்தி மாரியம்மன்க்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிவழிபாட்டில் ஈடுபட்டனர்.