சாயல்குடி சக்தி மாரியம்மன் ஆடிப்பொங்கல் உற்சவம்:பால்குடம் ஊர்வலம் பாலாபிஷேகம் அழகுவேல் அக்னி சட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய ஆடிப்பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் அழகுவேல் அக்னிசட்டி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
முன்னதாக சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் மேளதாளங்கள் வான வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக நகர் வாலம் சென்று ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய வந்தடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் ,பால், தயிர், சந்தனம், இளநீர், மூலிகை பல்வேறு அபிஷேக அலங்காரங்கள் தீபாதாரணை நடைபெற்றது இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆடிப்பொங்கல் உற்சவம் அக்னிசட்டி பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேத்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.
Admin
1 நிமிட வாசிப்பு