தாய்மார்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் கீதா ஜீவன் உலக தாய்ப்பால் வார விழாவில் பேசினார். உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. உலகத் தாய்ப்பால் வார விழா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு உலக தாய்ப்பால் வார விழாவை துவங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். இது தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது குழந்தைகளின் எதிர்காலம் நமது கையில் தான் இருக்கிறது ஆகையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக தாய்ப்பால் ஆறு மாதம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பக புற்றுநோய், உள்ளிட்ட நோய்களிலிருந்து தம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் ஆகையினால் அனைவரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினர்.
தூத்துக்குடி
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் அமைச்சர் கீதா ஜீவன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறுக்குத்துறை சாலைக்கு தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பெயர்!
அடுத்த
ஆண்கள் உடல் முழுவதும் சகதி பூசி நள்ளிரவில் செத்தாண்டி வேடம் அணிந்து அம்மனுக்கு வினோத வழிபாடு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026