ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு... 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன்,ஸ்ரீ விநாயகர், சுடலை மாடசாமி, சாமிகளுக்கு திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 31ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 4 கால ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து இன்று காலை மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜையுடன் தொடங்கி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு துணிந்து நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ சுடலைமாடசாமி, மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ அருள்மிகு காமாட்சி அம்மன், சாமிகளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம்,இளநீர் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமார்,நடராஜ்,மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் 41 நாளைக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் அலங்கார தீபாரனை, மஹேஸ்வர பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்..