ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள வேப்ப மரத்தடி நீதி அரசர் காட்டு  விநாயகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 108 பால்குடங்களை பெண்கள்  வானவேடிக்கு மேல தாளம் இசை வாத்தியங்களுடன் மதுரை சாலை தாலுகா அலுவலகம் யூனியன் அலுவலகம் வழியாக நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு  ஊர்வலம்  பால் குடங்களை பெண்கள் சுமந்து சென்று ஆலயம் வலம் சென்று வேப்ப மரத்தடி நீதியரசர் காட்டு விநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து வேப்ப மரத்தடி நீதியரசர் காட்டு  விநாயகர் சுவாமியை கோயில் பூசாரி சுந்தர் பால்குடத்திற்கு முன்பாக  சுமந்து சென்று  விநாயகருக்கு பால், தயிர், சந்தன, இளநீர், பன்னீர் ,விபூதி ,பஞ்சாமிர்தம் 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது ,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.