எட்டையபுரத்தில், விமர்சையாக நடைபெற்ற "விஸ்வகர்மா ஜெயந்தி விழா" : கொடியேற்றி கொண்டாட்டம்!
நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தியின் விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஊராட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் தலைமையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி எட்டயபுரத்தில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில், விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் ஆர்.எஸ்.எம்.மூர்த்தி கலந்து கொண்டு விஸ்வகர்மா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் அங்கிருந்த விஸ்வகர்மா இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்களிடம் சிறப்புரையாற்றிய பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம்,

பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த "விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்" நோக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்து அதில் எவ்வாறு விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

பின் இறுதியாக அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.