கமுதி அருகே கொடுமலூர் குமரக் கடவுள் ஆடி கிருத்திகை பெருவிழா -பறவை காவடி ,பால்குடம் ,அழகு வேல் ,காவடி பாதயாத்திரையா பக்தர்கள் சென்று நேத்திக்கடன் நிறைவேற்றம் ! கொடுமலூர் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் குமரக் கடவுள் ஆலயத்தில் இரவு முழுவதும் 33 வகையான அபிஷேக அலங்காரம் சங்காபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு தரிசனம்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொடுமலூர் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் குமரக் கடவுள் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பறவை காவடி பால்குடம் அழகுவேல் காவடி உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நேர்த்திக்கடன்களை பரமக்குடியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் தங்களது நேத்திக்கடன் களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் யாகசாலை பூஜை மஹா கணபதி ஹோமம் பூர்ணா குதி தீபாதாரணையும் அதனைத் தொடர்ந்து சுவாமி குமரக் கடவுளுக்கு பால் ,தயிர் ,சந்தனம் ,இளநீர் ,அரிசி மாவு, பன்னீர் ,விபூதி, கரும்புச்சாறு, தேன், நெய், கும்ப நீர் அபிஷேகம் உள்ளிட்ட 33 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்கார தீபாதாரணை நடைபெற்றது .இதில் பரமக்குடி, கமுதி ,அபிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாதயாத்திரை சென்ற சென்ற பக்தர்கள் இரவு முழுவதும் நடைபெற்ற அபிஷேகப் பெருவிழாவில் பங்கேற்று சுவாமி குமரக்கடவுள் அருள் ஆசி பெற்று சென்றனர்.
ஆன்மிகம்
ஆடி கிருத்திகை முன்னிட்டு பறவை காவடி எடுத்து, அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
Admin
1 நிமிட வாசிப்பு