வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் - முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை.
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களை இன்று சென்னையில் சந்தித்து விரைவில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் கோவில்பட்டி ரயில்நிலையம் Amrit Bharat Station திட்டத்தின் கீழ் ரூ25கோடி மதிப்பில் ஒப்பந்தம் நிறைவு பெற்று விரைவில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.