தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில்  புதூரில்   கையெழுத்து பெரும் இயக்கம் நடைபெற்றன!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் வலியுறுத்தி மதிமுக சார்பில் தமிழக முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெரும் இயக்கம் நடைபெற்று வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூரில் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் மதிமுக சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரா. ராஜ்குமார் தலைமையில் கையெழுத்து பெறப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ் ,ராமகிருஷ்ணன் , புதூர் பேரூர் கழக செயலாளர் முருகேசன், இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.