விளாத்திகுளத்தில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விசிக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பொது சிவில் சட்டம் மற்றும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசைக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்,
• பாஜக மோடி அரசு அறிமுகம் செய்திருக்கிற மக்கள் விரோத பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்
• மணிப்பூரில் நடைபெற்ற பயங்கர கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக மாநில அரசை கண்டித்தும்
• பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாநிலத் துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், விளாத்திகுளம் தொகுதி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஆ. சடையாண்டி, தொண்டரணி வில்லாளன் ரெஸ்லின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.