பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்துக்கள்!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது, நடைபெற்ற போட்டிகளில்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு உயர் தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சசிகலா பங்கேற்று, சிலம்பப் போட்டியில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார், சசிகலாவை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பாராட்டி வரும் நிலையில்,
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் பொன்னுத்துரை மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்களுடன் புதூர் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பெஞ்சமின் பாண்டியன், துணைத் தலைவர் திரு ஜெயராம் விவசாய அணி ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜா, தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் திரு காளிதாஸ், பிரச்சார பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் திரு லட்சுமண பெருமாள், சமத்துவபுரம் கிளை தலைவர் திரு மூக்காண்டி, ஓ துரைசாமிபுரம் திரு முனியசாமி உள்ளிட்ட பலரும் மாநில அளவில் சிலம்பாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சசிகலா என்ற அரசு தொழிற்பயிற்சி மாணவி வாழ்த்தி சால்வை அணிவித்து நன்கொடை கொடுத்து புத்தகங்கள் கொடுத்து மகிழ்வித்தனர் .