விளாத்திகுளம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி : சிலுவைபுரம் அணியினர் முதலிடம்!

தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் பொதுக் கூட்டங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள்  மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக விளாத்திகுளம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டனர். இந்த கபடி போட்டியை விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து கபடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்தார்.பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில் இறுதி ஆட்டத்தில் வேம்பார் - சிலுவைபுரம் அணியினர்  மோதிக்கொண்டனர். இதில் சிலுவைபுரம் அணியினர் முதல் இடத்தைப் பெற்று பரிசு கோப்பையை வென்றனர்.அதேபோன்று 2,3  இடங்களை வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் கபடி அணிகள் தட்டி சென்றனர். கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில் மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் மருதகனி, சுப்பிரமணியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் பால்பாண்டியன், ராமசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி எப்ரோ மீனா மேரி, ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், புனிதா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் கனகராஜ்,துணை அமைப்பாளர் ராஜா, வேல்முருகன், ஒன்றிய தொண்டர் அணி பாலமுருகன், ஆதித்யன், ஒன்றிய சிறுபான்மை அணி தர்மநேச செல்வின், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன், கிளை செயலாளர்கள் சடையாண்டி, சுந்தர், ஆறுமுகம் ,சரவணன், ஹரிகிருஷ்ணன், கந்தசாமி ,நல்லமுத்து, முனியசாமி, சந்திரசேகரன், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்டம் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியை ஏராளமான கபடி ரசிகர்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர்.