குடி நீருக்காக பைக்கில் சென்று ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி பேரூராட்சிகள் மற்றும் 308 கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் 9 உறை கிணறுகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சென்றார். அப்பகுதிக்கு கார் செல்ல முடியாது என்பதால் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் உடன் பைக்கில் ஆய்வுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்...