விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் முதியோர் இல்லத்தில் சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம்! 6-ம் ஆண்டு உலக "இயற்கை மருத்துவ தினத்தையொட்டி" தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு & யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மற்றும் நாகலாபுரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில், விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அமைந்துள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழ் அமுதன், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஜனார்த்தன், நாகலாபுரம் சித்த மருத்துவர் டாக்டர் விஜயலதா ஆகியோர் கலந்துகொண்டு இயற்கை உணவு முறைகள் பற்றியும், எளிய யோகா பயிற்சிகள் பற்றியும், முதியோர்களுக்கு விளக்கிக் கூறினர். மேலும் இந்த முகாமில் இயற்கை மருத்துவ பிரிவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இயற்கை உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பின்னர் நிகழ்வின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் உடல் பலம் நிரம்பிய அவள், வாழை, பேரிச்சை, உலர்திராட்சை, மற்றும் முருங்கை கீரை சூப் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
உடல்நலம்
நாகலாபுரம் முதியோர் இல்லத்தில் சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு முகாம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சூரனை வதம் செய்த சண்முகர்... விண்ணை பிளந்த அரோகரா கோசம்!
அடுத்த
20-11-2023 திங்கள் கிழமை நாளை மின்தடை