தூத்துக்குடியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முத்துநகர் கடற்கரையில் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு 32 வகையான யோகாசனங்களை செய்தனர்.

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பூங்காவில் இந்திய தேசிய மாணவர் படை தூத்துக்குடி பிரிவு கடற்படை மற்றும் தரைப்படை சார்பில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேசிய மாணவர் படை கப்பல் படை பிரிவை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், கருடாசனம் ,தனுராசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம் , உஸ்ட்ராறாசனம் , ஸ்வானா சனம்உள்ளிட்ட 32 வகையான ஆசனங்களை செய்தனர் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் தரக்கூடிய இந்த ஆசனங்களை மாணவ மாணவிகள் ஆர்வமுடன் செய்தனர்.