தூத்துக்குடி  ரஜினி ரசிகர்கள் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து நெல்லையில் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படத்தை காண சென்றனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடியில் பெரிசன், பாலகிருஷ்ணா, கே எஸ் பி எஸ், உள்ளிட்ட ஐந்து திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம்  வெளியாகி உள்ளது.  இந்த நிலையில் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள்  சார்பில் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஏற்பாட்டில் லிங்கா குமார், சிவா, காந்தி, ஐயப்பன் முருகன் வள்ளிநாயகம்,  செந்தில், மாணிக்கம், ரமேஷ், 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வேனில் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெல்லை  முத்துராம் திரையரங்கில் வெளியாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் காண சென்றனர்.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  திரைப்படம்  வெளியாகும் நாள் தங்களுக்கு தீபாவளி பொங்கல் திருநாள் போல் வெகு சிறப்பாக கொண்டாடும் இந்த உற்சாகத்தை கொண்டாடுவதற்காக ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து நெல்லையில் உள்ள திரையரங்கத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை காண செல்கிறோம் என ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.