தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம்  ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.