தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் பார்க்க சென்ற திமுகவினர் ஓசியில் பாப்கான் கேட்டு தியேட்டரில் நடைபெற்ற  வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது  வழக்கு பதிவு .தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் கீதா ஜீவன் பெயரை பயன்படுத்தி திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகியோர் தலைமையிலான திமுகவினர் அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தை ஓசியில் பார்த்ததுடன் பட இடைவேளையின் போது ஓசியில் பாப்கான் கேட்டு திரையரங்க ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.இதைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த மத்திய பாகம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட திமுகவினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையை மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து மத்திய பாகம்  காவல்துறையினரை பணி செய்ய விடாமல் அவதூறான வார்த்தைகளை பேசிய தொடர்பாக திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் வீடியோ காட்சிகளை கொண்டு மற்ற திமுக நிர்வாகிகளையும்  வழக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.