அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பெற்று அமலாக்கத்துறை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டி :முடி காணிக்கை மண்சோறு சாப்பிட்டு-அங்கப் பிரதட்சணம் வழிபாடு செய்து 501 சிதறு தேங்காய் உடைத்து வழிபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர் !
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அம்மன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர் கண்ணன் என்பவர் தனது குல தெய்வ கமுதி வழிவட்ட அய்யனார் ஆலயத்திற்கு சென்றுதனது முடி காணிக்கைசெலுத்திய அவர்ஆலயத்திற்குள் சென்றுமூலவர் வழிவிட்ட அய்யனாரைபயபக்தியுடன் வழிபட்டு அங்க பிரதட்சணம் உருண்டு வழிபாடு செய்து அதனைத் தொடர்ந்து கோயிலின் வாயில் முன்பாக 501 செதரு தேங்காய் உடைத்து அதன் முன்பாக மண் மன்சோறை உட்கொண்டு,அமைச்சர் செந்தில் பாலாஜி முழு உடல் ஆரோக்கியம் பெற வேண்டியும் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டியும் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்று மக்கள் பணி சேவையாற்றிட வேண்டி அவது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார் .
தேங்காய் உடைத்து முடிந்த சிறிது நேரத்தில் அங்கிருந்த கூடியிருந்து வேடிக்கை பார்த்த பெண்கள் தங்களது முந்தானைகளிலும் சாக்கு மூட்டைகளிலும் அள்ளி பொறுக்கி எடுத்து சென்றனர்.
தமிழ்நாடு
செந்தில் பாலாஜி உடல் நலம் பெற முடி காணிக்கை, மண்சோறு சாப்பிட்ட ஆதரவாளர் !
Admin
1 நிமிட வாசிப்பு