தூத்துக்குடி- தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன மேலும் கடற்கரை பகுதி ஆழ்கடல் மற்றும் ஆறு ஆகியவற்றை இணைக்கும் வகையில் மும்பை துறைமுகம் முதல் விசாகப்பட்டினம் துறைமுகம் வரை பயணிகள் சேவை கப்பல் துவங்கப்பட உள்ளது துறைமுகங்களில் பயணிகள் கப்பல் நிற்கக்கூடிய முனையங்கள் அமைக்கப்பட உள்ளது சாகர் மாலா திட்டத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றது தூத்துக்குடி மற்றும் குஜராத் துறைமுகங்களில் ஆழ்கடலில் காற்றாலை அமைத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்காக கடலில் காற்றாலை நிறுவுவதற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை செயலாளர் டி கே ராமச்சந்திரன் தூத்துக்குடியில் பேட்டி.தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தின் வி வடிவீலான புதிய லோகோவை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து செயலாளர் டி கே ராமச்சந்திரன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துறைமுக ஆணைய தலைவர் பொறுப்பு பிமல் குமார் உள்ளிட்ட துறைமுக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து மத்திய கப்பல் துறை செயலாளர் டி கே ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தை உலக அளவில் வெளிக்காட்டும் வகையில் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மேலும் அவர் கூறுகையில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சுமார் ஐந்து லட்சம் கோடிக்கு பணிகள் நடக்க உள்ளது தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 5000 கோடிக்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது கட்டப்பட்டு வரும் ஒன்பதாவது கப்பல் தளம் மூலம் பல்வேறு நாடுகளுக்கு கப்பல் சேவைகள் துவங்கப்பட உள்ளன இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் சுற்றுலா வளர்ச்சிக்காக சுற்றுலா முனையங்கள் உருவாக்கப்படுவதுடன் பயணிகள் கப்பல்கள் வந்து செல்லக்கூடிய வகையில் பயணிகள் கப்பல்கள் நிற்கக்கூடிய முனையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன மேலும் இந்தியாவில் கடற்கரைப் பகுதி ஆறுகள் மற்றும் ஆழ்கடல் பகுதியை இணைக்க கூடிய வகையில் மும்பை முதல் விசாகப்பட்டினம் வரை விரைவில் பயணிகள் கப்பல் சேவை துவங்கப்பட உள்ளது மேலும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிக்க கப்பல் சேவை துவங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதற்காக பயணிகள் மற்றும் கட்டண சலுகை ஆகியவற்றை பொறுத்து விரைவில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்க ப்பட உள்ளது ,மேலும் தூத்துக்குடி மற்றும் குஜராத் துறைமுகங்களிள் கடல் பகுதியில் காற்றாலை அமைத்து மின்சாரம் பெறக்கூடிய திட்டம் உள்ளது இதன் அடிப்படையில் தூத்துக்குடி துறைமுகத்தில் கடல் பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆழ்கடலில் காற்றாலைக்கான சுவர்கள் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன இதன்மூலம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட உள்ளது தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிப்புற துறைமுகம் அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன மேலும் மும்பை அருகே புதிய துறைமுகம் கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என அவர் தெரிவித்தார்.தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணியர் சோசு கப்பல் சேவை தொடங்கினால் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம்
தூத்துக்குடி- தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை!
Admin
1 நிமிட வாசிப்பு