தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டு வேலைக்கான போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது - மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.கடந்த 2021ம் வருடம் விளாத்திகுளம் பூசனூர் பகுதியை சேர்ந்த அருளப்பன் மகன் எபனேசர் (45) என்பவர் விளாத்திகுளம் வி. வேடப்பட்டி பகுதியை சேர்ந்த தாழைச்சாமி மகன் தாளமுத்து (31) என்பவரிடம் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியதை நம்பி தாளமுத்து என்பவர் எபனேசரிடம் ரூபாய் 40,000/- பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் எபனேசர் என்பவர் தாளமுத்துவுக்கு வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார்.இதுகுறித்து தாளமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு எபனேசரை கடந்த 18.08.2023 அன்று கைது செய்தனர்.மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சண்முகசுந்தரம் மற்றும் தலைமை காவலர் திரு. செந்திவேல் முருகேயன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் மற்றொருவரான தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சக்கையா (54) என்பவரை கடந்த 07.09.2023 அன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சக்கையா விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை முன் நின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தூத்துக்குடி
பண மோசடியில் ஈடுபட்ட மாட்டு ரேஸ் சக்கையா கைது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடல் கயாக் சாகச போட்டி! கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
அடுத்த
தூத்துக்குடி- தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026