தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய அளவிலான கடல் கயாக் சாகச போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 16 மாநிலங்களைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.
இந்தியன் கயாக் மற்றும் கனோயிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு அசோசியேசன் ஆப் கயாக் அண்ட்கனோயிங் சார்பில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் கடல் கயாக் சாகச போட்டி தொடங்கியது. இந்த போட்டி துவக்க விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
ஸ்டாண்ட் அப் பெடலிங், ஒற்றையர், இரட்டையர் படகு போட்டி உள்ளிட்ட கடல் சாகச போட்டிகள் முதல் 10ஆம் தேதி வரை முத்துநகர் கடற்கரையில் நடைபெறுகிறது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த சுமார் 150 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்.
போட்டிகள் கடலில் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை நடத்தப்படுகின்றன இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் முறையாக சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசாக 20000 வழங்கப்படுகிறது இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆசிய அளவிலான போட்டி மற்றும் சர்வதேச அளவிலான கையாக் போட்டிக்கு தகுதி பெறுவர்.
தூத்துக்குடி
கடல் கயாக் சாகச போட்டி! கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
108 ஆம்புலன்ஸ் இல்லாததால் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.
அடுத்த
பண மோசடியில் ஈடுபட்ட மாட்டு ரேஸ் சக்கையா கைது.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026