கோவில்பட்டியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு  கி.ரா. நினைவரங்கத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள் !  சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருக்கவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தவும் உறுதியேற்பு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கரிசல் இலக்கியத்தின் தந்தை  கி. ராஜநாராயணனின் நினைவரங்கத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.நாடு முழுவதும் செப் - 27ம் தேதி உலக சுற்றுலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருக்கவும்,பாதுகாத்திடவும், அரிய தகவல்களை எளிய முறையில் தெரியப்படுத்தவும்,காலாண்டு விடுமுறையில் பாடப் புத்தகத்தோடு நூலக புத்தகங்களையும் வாசித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாசிப்பு திறன் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  பின்பு நினைவரங்கத்தில் உள்ள டிஜிட்டல் நூலகம், கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர்.இந்நிகழ்ச்சியில் நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு, சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன், ஆசிரியர்கள் கீதாராணி, சுஜா, உமாசங்கரி, ராமமூர்த்தி,  நினைவரங்க பொறுப்பாளர் வன்னிய ராஜ் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.