தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் 90 பேர் ஏற்கனவே விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என்று விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது வரை அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் அதிகாரிகள் மொத்தமாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பார்த்திபன் தலைமையில், பனையூரை சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பங்களுடன் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் ஏற்கனவே பலமுறை மனு அளித்திருந்தும், தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும் தற்போது வரை தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாதது ஏன்? என்று விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் கேட்டு.... நிலமும், வீடும் இல்லாததால் வாடகை வீட்டில் மழைக்காலங்களில் தாங்கள் படும் கஷ்டத்தை வட்டாச்சியரிடம் விளக்கிக்கூறி உடனடியாக தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உங்களது அனைவரின் மனுக்களின் மீதும் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தார். இதில் பனையூர் கிராம தலைவர் வேலு முனியாண்டி, தெற்கு ஒன்றிய பாஜக சுயம்பு, கட்சி நிர்வாகிகள் கந்தசாமி, இருதயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Vilathikulam
உப்பளத் தொழிலாளர்கள் 90 பேர் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலையை புறக்கணித்து அதிகாரிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த
தட்டைக்காட்டு திருவிழாவை விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்: குவிந்த திரளான பக்தர்கள்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026