மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் கொடுமை செய்த பாஜக எம்பி யை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்!
மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பிஜேபி எம்பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது போக்சோ வழக்கு பதிந்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, மாறாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, போராட்டங்களை சீர்குலைப்பதை கண்டித்தும்..,
பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட பாஜக எம்பியை கைது செய்யவும் ஜூன் 5 நாடுமுழுவதும் போராட்டம் நடத்திட ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM)அறைகூவல் விடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக திங்களன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ( SKM) விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்பாட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சரவணமுத்து வேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், நடராஜன்,ஆர்.ரவீந்திரன், தாலுகா நிர்வாகிகள் ராமலிங்கம்,பிச்சையா, வேலாயுதம், செல்வி மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பாஜக எம்.பி.க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்ட முடிவில் ஒரிசா ரயில் விபத்தில் இறந்த பயணிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.