கோவில்பட்டியில் “அரிசி கொம்பன்” யானை!

“அரிசி கொம்பன்” யானை வெப்பத்தை தணித்த கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர்!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த வராம் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  அதன் பின்னர் அங்கிருந்து  திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இன்று காலை தேனியில் இருந்து புறப்பட்ட அரிசி கொம்பன் யானை விருதுநகர் வழியாக தூத்துக்குடி மாவட்ட எல்லை பகுதியான கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி  விலக்கு பகுதிக்கு வரும் போது வெயிலின் தாக்கத்திலிருந்து வெப்பத்தை தணிப்பதற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரிசி கொம்பன் யானையை குளிர்வித்தனர்  . மயக்க நிலையில் இருந்தாலும் சற்று ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதால் பயத்துடனே தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி நோக்கி புறப்பட்டு சென்றது அரசி கொம்பன் யானை...