
ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளிநாயகிபுரம் ஊராட்சி பட்டியூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 5,50,000 மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், காமராஜ் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, புவிராஜ், ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி, கௌரி கருணாகரன், சண்முகையா, சந்தனராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கருணாகரன், சென்றாயப்பெருமாள், கூட்டுறவு சங்கத்தலைவர் ஆனந்த், கிளை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், சின்னத்தம்பி, லட்சுமணன் உட்பட கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.