தூத்துக்குடி மீளவிட்டான் முதல் தூத்துக்குடி வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7.6 கீலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு அடைந்ததுயொட்டி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் மீளவிட்டாணில் இருந்து ஆறு ட்ராலிகள் மூலம் ரயில் பாதையில் சென்று ஆய்வு!
தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையம் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை சுமார் 7.6 கிலோ மீட்டர் தூரம் இரட்டை ரயில் பாதை பணிகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு அடைந்ததையொட்டி இந்த ரயில் பாதை பாதுகாப்பு குறித்து தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்ரி ஆய்வு செய்வதற்காக இன்று மீளவிட்டான் ரயில் நிலையம் வந்தார்.
முன்னதாக மீளவிட்டான் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எத்தனை ரயில்கள் இந்த ரயில் பாதை வழியாக இயக்கப்படுகிறது. என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதை பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சௌத்ரி, மதுரை மண்டல பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கான ட்ராலிகள் மூலம் ரயில்வே தண்டவாளத்தில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுப் பணிகள் இன்று மதியம் நிறைவு பெற்றபின் மாலை தட்டப்பாறை முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை அதிவேக மின்சார ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மீளவிட்டான் முதல் தூத்துக்குடி வரை 7.6 கீலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"தேய்பிறை அஷ்டமியை" முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு !
அடுத்த
கந்து வட்டி பிரச்சனை -அக்னி சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026