கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 எதிரிகள் கைது - 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன், தலைமை காவலர் திரு. அமல்ராஜ் மற்றும் முதல் நிலை காவலர் திரு. பாண்டியராஜன் ஆகியோர் நேற்று (10.07.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி இந்திராநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களான செண்பகராஜ் மகன் மருதுபாண்டி (27), சங்கிலிபாண்டி மகன் பொன்பாண்டி (22) மற்றும் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்த அழகு லட்சுமணன் மகன் மகேந்திரன் (20) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான மருதுபாண்டி, மகேந்திரன் மற்றும் பொன்பாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி மருதுபாண்டி மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், எதிரி மகேந்திரன் மீது 2 வழக்குகளும்,
எதிரி பொன்பாண்டி மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 5 வழக்குகள் உள்ளது