சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ,தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று 11.7.23 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜெயா அவர்கள்,கோவில்பட்டி நகராட்சி தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் அவர்கள்,கயத்தார் வட்டாட்சியர் திரு.நாகராஜன் அவர்கள்,கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.டி.ஜேபிஆர்.தம்பா அவர்கள்,வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வாரிசுதாரர்கள் திருமதி.மீனாட்சி அவர்கள்,திருமதி.ராஜேஸ்வரி அவர்கள்,திருமதி,ராணி அவர்கள்,திருமதி.வனஜா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.