எட்டயபுரத்தில் தேவர் படம் அவமதிப்பு - பொது மக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம்  மேலவாசல் பகுதியில் தூத்துக்குடி- கோவில்பட்டி செல்லும் சாலையில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான சுவற்றில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படம் உள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் மூன்று பேர் குடிபோதையில் தேவரின் திரு உருவப்படத்தின் மீது காலணியை தூக்கி வீசி தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் தூத்துக்குடி- கோவில்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்..