விளாத்திகுளம் அருகே சுதந்திர போராட்ட வீரர் திருவுருவ படத்திற்கு அவமரியாதை - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் - போக்குவரத்து பாதிப்புதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் மேலவாசல் பகுதியில் ஒரு சமூகத்திற்கு சொந்தமான சுவற்றில் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்முத்துராமலிங்க தேவர் திருவுருவ படம் வரையப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலையில் அப்பகுதி வழியாக சென்ற 3 பேர்  மது போதையில் தாங்கள் அணிந்து இருந்த காலணிகளை தேவர் திருவுருவப்படத்தின் மீது விசி எறிந்து விட்டு தகாத வார்த்தைகளால் பேசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அநாகரிகமாக நடந்து கொண்ட 3 பேரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி - கோவில்பட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலையில் மரக்கிளைகள், கற்களை வைத்து வாகனங்களை செல்ல விடமால் தடுத்து நிறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.3 பேரையும் விரைந்து கைது செய்யது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். போராட்டம் காரணமாக போக்குவரத்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.