தூத்துக்குடியில் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செ. கற்குவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சங்கரலிங்கம். மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.கணேசன்,மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு இணைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் முறையில் நடத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தன்னிச்சையாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்க கூடாது. ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் இசக்கிமுத்து (ஓட்டப்பிடாரம்), சிவபாலன் (கோவில்பட்டி), சோமு(கருங்குளம்), முத்துக்கண்ணன் (புதூர்), அருள் (உடன்குடி),மாவட்ட இணை செயலாளர் நரசிம்மன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர் சின்னகருப்பசாமி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் பாலகுமார் , விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய தலைவர் தங்கமாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாரிக்கனி நன்றி கூறினார்.