கமுதி அருகே ஶ்ரீகுருநாத சுவாமி கோயில் 49வது குருபூஜை விழாவை முன்னிட்டு :சிறுவர்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் ! 



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குருநாத சுவாமி கோவில் 49வது குரூ பூஜை விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரிய நாச்சியம்மன், ஸ்ரீசித்தி விநாயகர், படர்ந்தபுளி ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.நாள்தோறும் ஸ்ரீ குருநாதசுவாமி,ஸ்ரீ பெரிய நாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 500க்கும் மேபற்ட்ட பக்தர்கள் ஸ்ரீ குருநாதசுவாமி கோவிலில் இருந்து பால் குடங்களை சுமந்து பம்மனேந்தல் கிராமத்தில் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்றனர்.பின்னர் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் ஆலயத்தை பால்குடம் வந்தடைந்து. 


பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

சிறுவர்கள் தங்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வேப்பிலையை கையில் பிடித்து ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.

தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சகதியை உடலில் பூசிக் கொண்டால் தோல் நோய், அம்மை நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாது என்பது ஐதீகம்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.