குடிநீர் இல்லை, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவில்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியான எட்டயபுரம் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக அங்கு இருந்த குடிநீர் இணைப்பு குழாய் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் குழாய் இணைப்பு உயரமாக வைத்து இருப்பதால் வீடுகளுக்கு சீராக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்கமால் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கி வருகின்றனர். மாற்றி அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு குழாய்யை சரி செய்து சீராக குடிநீர் வழங்க வேண்டும், அல்லது 2வது குடிநீர் திட்டம் மூலமாக புதிய குடிநீர் இணைப்பு குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்று பலமுறை நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 20வது வார்டு பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் திடீரென எட்டயபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருவார காலத்திற்குள் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது