கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில்  உலக சுற்றுச்சூழல் தின விழா !                                                                          

கோவில்பட்டி இந்தியா பசுமை இயக்கம்,பாரதியார் நினைவு அறக்கட்டளை ஆகியவை  சார்பில் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி சிட்கோ சிட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை  முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டிசிட்கோ சிட்டியில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

ஜே சி ஐ முன்னாள் தலைவர் முரளி கிருஷ்ணன்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியா பசுமை இயக்க தலைவர் குமார் அனைவரையும். வரவேற்றார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் லிங்கம்பட்டி  பொதுமக்கள்  மாடசாமி, இசக்கி, ராஜ், உள் பட பலர் கலந்து கொண்டனர்.சுமீ டெவலப்பர்ஸ் நிர்வாகி தினேஷ் நன்றி கூறினார்.