தூத்துக்குடி மாநகரில் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி ஓபிஎஸ் அணி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு! 

தூத்துக்குடி மாநகர ஓபிஎஸ் அனி மாவட்ட செயலாளர் ஏசாத்துரை தலைமையில் ஓபிஎஸ் அணி அதிமுக வினர் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜை சந்தித்து மனு அளித்தனர்

அந்த மனுவில் தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது மேலும் தமிழக அரசு தனியார் பள்ளியில் ஏழை மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒதுக்கீடு செய்துள்ள 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தாமல் அதற்கும் கட்டணம் வசூலிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது எனவே இந்த விஷயத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கட்டணக் கொள்யை தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்