தூத்துக்குடி தனது தந்தை மரணத்திற்கு காரணமான திமுக மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்காததை கண்டித்து நீதி வழங்கிடு என்ற பதாகைகளை கழுத்தில் அணிந்தபடி குழந்தைகள் தனது தாயுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கடந்த 25ஆம் தேதி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள திமுக மாவட்ட நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அண்ணா சிலை அமைக்கப்பட்ட பகுதியில் உள்ள இரும்பு வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி கீரை வியாபாரி ஜெய்கணேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த சம்பவத்திற்கு காரணமான திமுக மாவட்ட நிர்வாகம் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை ருபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜெய்கணேசன் மனைவி லிங்க சிவா தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார் ஆனால் கடந்த 10 நாட்களாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இதைத்தொடர்ந்து இன்று மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ஜெய்கணேசின் இரண்டு குழந்தைகளும் எனது தந்தை சாவிற்கு காரணமான திமுக மாவட்ட நிர்வாகம் தூத்துக்குடி மாநகராட்சி தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பீடாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும் அரசு வேலை வழங்க வேண்டும் நீதி வழங்குக என்ற வாசகங்கள் அடங்கிய பதாககளை கழுத்தில் அணிந்தபடி தனது தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர் மாவட்ட நிர்வாகம் தங்களது கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் தனது கணவர் இறந்த இடத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள தாங்கள் அதே இடத்தில் பலியாகி விடுவோம் என கூறினர்