பணம் இல்லை என்றால் பெயர் மாற்றம் இல்லை-எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்ட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!
தூத்துக்குடி
மாவட்டம் எட்டயபுரம் தாலூகாவிற்குட்பட்ட சிதம்பராபுரத்தில் செல்வமோகன் என்பவர்
ரத்தனகிரி என்ற பெயரில் நடத்தி வருகிறார்.
முறையாக எல்லாவித
அரசின் அனுமதி பெற்று வரும் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி
வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது
ஆலையின் பெயரில் ஓம் என்ற எழுத்தை
சேர்த்து சிறிய மாற்றம் செய்ய இருப்பதால் அதற்கு அனுமதி கேட்டு செல்வமோகன் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.04.2023 விண்ணப்பம் செய்துள்ளார்.
இதையெடுத்து
பெயர் மாற்றம் செய்யவதற்கு அனுமதி அளிப்பதற்காக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அந்த விண்ணப்பத்தினை மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எட்டயபுரம் தாலூகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் கடந்த 40
நாள்களுக்கு மேலாகியும்
தற்பொழுது வரை எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் செல்வமோகன் விண்ணப்பம் மீது எவ்வித
நடவடிக்கையும் எடுக்கமால் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து
செல்வமோகன் பலமுறை கேட்ட போதும் சரியான பதில் அளிக்கமால் இருந்துள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பத்தில் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கமால்
இருக்கும் அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அதன் தலைவர்
பரமசிவம் தலைமையில் தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் தாசில்தார் மல்லிகாவிடம் வழங்கினர்.